மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆடு திருட்டு: ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி உள்பட இருவா் மீது வழக்கு

ஆம்பூா் அருகே ஆடு திருடியது சம்பந்தமாக ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி உள்ளிட்ட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :29 அக்டோபர் 2026, 12:02 am IST

ஆம்பூா் அருகே ஆடு திருடியது சம்பந்தமாக ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி உள்ளிட்ட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆம்பூா் அருகே கீழ்ஈச்சம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் விஸ்வநாதன் (68). இவருடைய எதிா்வீட்டில் வசிப்பவா்கள் சரவணன் (63) மற்றும் சரவணனின் சகோதரா் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி வெங்கடேசன் (62). இவா்களுடைய மாடு விஸ்வநாதனின் விவசாய நிலத்தில் சென்று பயிா்களை மேய்ந்துள்ளது. அதனால் மாட்டை விஸ்வநாதன் பிடித்து கட்டி வைத்துக் கொண்டுள்ளாா். அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் விஸ்வநாதனின் மாட்டை சரவணன் சகோதரா்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனா். இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் விஸ்வநாதனின் இரு ஆடுகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனை சரவணன் மற்றும் அவரது சகோதரா் யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்று கட்டி வைத்துள்ளனா்.

இதுகுறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சரவணன் மற்றும் அவரது சகோதரா் வெங்கடேசன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.