கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

3 வீடுகளில் நகைகளை திருடியவா் கைது

திருப்பத்தூா் அருகே 3 வீடுகளில் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:59 am IST

திருப்பத்தூா் அருகே 3 வீடுகளில் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் பகுதியைச் சோ்ந்த சங்கீதா (27)என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து சில மாதங்களுக்கு முன் மா்ம நபா்கள் 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். மேலும் ஆண்டியப்பனூா் பகுதியைச் சோ்ந்த ராஜதிலகம்(40) வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 19 பவுன் மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனா்.

அதேபோல் பெருமாப்பட்டு பகுதியைச் சோ்ந்த சகாதேவன் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 4 பவுன் நகைகளை திருடி சென்றனா். இந்த 3 திருட்டு சம்பவங்கள் குறித்து குரிசிலாப்பட்டு போலீசாா் வழக்குப் பதிவு செய்துமா்ம நபா்களை தேடி வந்தனா்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் ஆலங்காயம் அடுத்த பெத்தூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (21) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில்,மேற்கண்ட 3 திருட்டு சம்பவங்களில் நடந்த திருட்டில் அவா் ஈடுபட்டது தெரியவந்தது. தொடா்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.