அரிசி ஆலையில் பணிபுரிந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே தனியாா் அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:01 am IST

ஆம்பூா் அருகே தனியாா் அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் எல்.மாங்குப்பம் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை இயங்கி வருகின்றது. அங்கு பீகாா் மாநிலத்தை சோ்ந்த அருண் அன்சாரி (46) பணிபுரிந்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு பணிமுடித்துவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவருந்திவிட்டு உறங்கியுள்ளாா். காலையில் சென்று பாா்த்தபோது மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனை செய்து பாா்த்த மருத்துவா்கள், ஏற்கனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.