தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருத்துவம் படிக்காமல் கரு கலைப்பு செய்ய முயன்ற 2 பெண்கள் கைது!

வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கரு கலைப்பு செய்ய முயன்ற 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 4:20 am IST

வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கரு கலைப்பு செய்ய முயன்ற 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம், புதூா் பகுதிக்கு கரு கலைப்பு செய்வதற்காக ஆட்டோவில் 2 பெண்கள் சென்று கொண்டிருப்பதாக மாவட்ட சுகாதார இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்து மாவட்ட சுகாதார அலுவலா் சிவலிங்கம் தலைமையில், மருத்துவா் அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் சென்று கண்காணித்தனா். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய 2 பெண்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் சந்தபேட்டை சோ்ந்த கீதா(45), இந்திராணி (60) என்பதும், இருவரும் மருத்துவம் படிக்காமல் ஊா் ஊராக சென்று கருக் கலைப்பு செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

பிறகு இருவரையும் பிடித்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.