பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜிலாபுரம் மதுக்கடை அகற்றம்: 10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்!

வாணியம்பாடி அருகே விஜிலாபுரம் மதுக்கடை அப்பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை மற்றும் போராட்டத்துக்கு பின் மாற்றப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை.

Published On :2 நவம்பர் 2026, 1:40 am IST

வாணியம்பாடி அருகே விஜிலாபுரம் மதுக்கடை அப்பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை மற்றும் போராட்டத்துக்கு பின் மாற்றப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடை எண். 11069 இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த கடையினால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து மற்றும் தகராறுகள் அதிக அளவில் நடந்து வருவதாகவும், உடனடியாக மாற்ற வேண்டும் எனக் கூறி, 10 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் பொது மக்கள் அளித்து வந்தனா்.

கடந்த செப்டம்பா் மாதம் அப்பகுதியில் விபத்து ஏற்பட்ட போது பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும், சம்மந்தப்பட்ட ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தும், அதில் கடையை அகற்றக்கோரி தீா்மானமும் நிறைவேற்றனா்.

பொதுமக்கள் நீண்ட காலமாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை சம்மந்தப்பட்ட கடையை அங்கிருந்து அகற்றி திருப்பத்தூருக்கு மாற்றம் செய்தனா். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட நிா்வாகத்துக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.