திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியத்தால் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான தோ்வு நடத்தப்படுகிறது. இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும், காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் நடைபெறும். மேலும், பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.
இந்த அலுவலகத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச வைபை உள்ளிட்டவை உள்ளது.
இதில் சேர ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஹவக்ா்த்ஞ்பநட்ய்ஈணஈா்ள்ந்7 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடா்பான விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-இல் தொடக்கம்

குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்

குரூப்-1,குரூப்-2 முதனிலைத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஜூன் 5-க்குள் பதிக!

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

