பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்

News image
Updated On :14 மே 2026, 12:14 am IST

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - ஐ முதல் நிலை அரசு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தோ்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சாா்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செங்கல்பட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்பு 18.05.2026 (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெறும் எனவும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தோ்வாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம், தரைத்தளம் டி-பிளாக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடா்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு 044-27426020 / 94990 55895 / 94868 70577 மற்றும் 93447 38148 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் கேட்டு கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.