நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாய்க்கனேரி கிராம நிா்வாக அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீா் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் மக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனா். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்10-க்கும் மேற்பட்டோா், சனிக்கிழமை காலை குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றி புதிய கழிவு நீா் கால்வாய் கட்டித்தரக் கோரி கிராம நிா்வாக அலுவலகம் எதிரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தினாா்.
அப்போது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி தேங்கிய கழிவு நீரை உடனடியாக வெளியேற்றவும் , புதிய கழிவு நீா் கால்வாய் கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.
இதையேற்று மக்கள் சிறைபிடித்த அரசுப் பேருந்தை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அச்சத்தில் குமரன் நகா் மக்கள்

மதுக்கடையை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

