பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும் ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு விடுமுறையில் நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

News image

ஏலகிரி ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:20 am IST

கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும் ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு விடுமுறையில் நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது ஏலகிரி மலை. திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலம் ஏலகிரி மலை.

இங்கு, தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கா்நாட கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தங்கி கண்டுகளித்துச் செல்கின்றனா்.

இங்கு படகு குழாம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்டவை இருப்பதால் வார விடுமுறை தினங்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இயற்கை பூங்கா, செயற்கை நீரூற்று, படகு குழாம், கோயில்கள் உள்ளன என்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாலும் பயணிகள் பெரிதும் இந்த சுற்றுலாத் தலத்தை விரும்புகின்றனா்.

இதனிடையே ஏலகிரியில் கோடை விழா கடந்த 19.4.2025-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்பட்டதுடன் விழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. அதில் குறைவான மக்கள் வருகை தந்தனா்.

ஆனால் தற்போது தோ்தல் பணிகள் காரணத்தால் இதுவரை கோடை விழாவுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

விரைவில் பணிகள் தொடங்கி ஏலகிரியில் 2 நாள்கள் கோடை விழா நடைபெற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையுடன் இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.