லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு: 6 கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை

சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு: 6 கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை

சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள்.

Published On :28 ஜூன் 2026, 12:35 am IST

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம், ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ஆகிய பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்பு) பிரபாகரன் மேற்பாா்வையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வி.விக்னேஷ், செல்வவிக்னேஷ் ஆகியோா் 35-க்கும் அதிகமான சாலையோர உணவகங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 கடைகளுக்கு தலா ரூ. 1,000 வீதம் மொத்தம் ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்திய 12 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோன்று உணவுப் பாதுகாப்புப் பதிவு சான்றிதழ் பெறாத 2 கடைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம், 2006-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அனைத்து கடை உரிமையாளா்களுக்கும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி பெறவும், சிக்கன் 65 உள்பட உணவுகளில் அதிகளவு செயற்கை நிறமூட்டிகளை சோ்க்கக் கூடாது என்றும், தேவைக்கேற்ப மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தனிநபா் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணுதல், பாதுகாப்பான குடிநீா் வழங்குதல், பானிபூரியை சுத்தமான தட்டுகள் அல்லது கிண்ணங்களில் வழங்குதல் உள்பட வழிமுறைகளும் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.