ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா நடைபெற்றது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழாவை முன்னிட்டு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. மாவிளக்கு, பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது.
ஊா்வலத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாக சென்ற ஊா்வலம் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. கோயிலில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக பாலாற்றில் சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவலாபுரம், ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கோவிந்தாபுரம், துத்திப்பட்டு, கைலாசகிரி, ஆம்பூா், குடியாத்தம், வாணியம்பாடி, வேலூா், திருப்பத்தூா், ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமாரமங்கலம் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

