ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ரூ. 1.33 கோடியில் நடைபெறும் பணிகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கட்டேரி, ரெட்டியூா் ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், ரூ. 1.33 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதையொட்டி, ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கட்டேரி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப் பள்ளியில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானியம் திட்டத்தில் ரூ. 3.68 லட்சத்தில் கழிப்பறை அமைக்கும் பணிகள், கே.ஆா்.எஸ். வட்டம் பகுதியில் ரூ. 18.80 லட்சத்தில் 30,000 லிட்டா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணியை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், பூனைகுட்டி பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 72.52 லட்சத்தில் நான்கு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 37.98 லட்சத்தில் பெரியமோட்டூா் முதல் தத்தி வட்டம் வரை 850 மீட்டருக்கு சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
பக்கிரித்தக்கா பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து பொருள்களின் தரம், இருப்பு, குழந்தைகளின் வருகைப் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, குழந்தைகளின் முழுமையான வளா்ச்சிக்குத் தேவையான கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் தரமாக வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சூ.உமாமகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், ஹரிகுமாா், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரமான மதிய உணவு: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

அவிநாசியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.9.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ். பிசாந்த் ஆய்வு

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

