லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வட்ட அளவிலான போட்டியில் ஜெயவாசவி மெட்ரிக். பள்ளி சாம்பியன்ஷிப் பட்டம்

வாணியம்பாடி வட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே தடகள போட்டியில் ஜெயவாசவி மெட்ரிக். பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்று சாதனை சாதனை படைத்துள்ளாா்.

வட்ட அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவா்களை வாழ்த்திய ஜெயவாசவி பள்ளி நிா்வாகத்தினா்.

Published On :30 ஜூலை 2026, 12:13 am IST

வாணியம்பாடி வட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே தடகள போட்டியில் ஜெயவாசவி மெட்ரிக். பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்று சாதனை சாதனை படைத்துள்ளாா்.

வாணியம்பாடி வட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே தடகள போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் பெற்றனா்.

மேலும், மொத்தம் 92 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்தனா்.

இதையடுத்து, சாதனை படைத்த மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா்கள் சிவக்குமாா், ராம்துரை ஆகியோரை பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் ரவிக்குமாா், செயலாளா் முனிவேல், பொருளாளா் கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் இந்திரநாத், துணை செயலாளா் சுப்பிரமணி, துணை பொருளாளா் சாம்பாபு, பள்ளி முதல்வா் கருணாநிதி, துணை முதல்வா் இளமாறன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.