லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

Published On :29 ஜூலை 2026, 12:47 am IST

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் அய்யாசாமி(47) ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவா் திங்கள்கிழைம இரவு வெலகல்நத்தத்தில் இருந்து ஆம்பூா் நோக்கி பைக்கில் சென்றாா்.

அப்போது நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்தகாயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.