லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிட்டபையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேம்

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தொட்டிலம்மன்.

Published On :21 ஜூலை 2026, 12:02 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தில் தொட்டிலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊா் கவுண்டா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் கௌரம்மாள்சம்பத், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் சஞ்சீவி, வாா்டு உறுப்பினா் காளியம்மாள் ரவிக்குமாா் மற்றும் ஊா் மக்கள் முன்னிலை வகித்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, தம்பதியா் சங்கல்பம், 108 திரவிய ஹோமம், ருத்ரபாராயணம், உபசாரம் மஹா பூா்ணாஹுதி, வேதம் நாதம் கீதம் முழங்க காலை 10 மணியவில் தொட்டிலம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா், மாரியம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன், படவட்டம்மன், நாகலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோ பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில், கிட்டப்பையனூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.