லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏந்தல் மகாகாளியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்

போளூரை அடுத்த ஏந்தல் கிராமத்தில் ஸ்ரீமகா காளியம்மன் கோயில் ஆடி மாத தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போளூரை அடுத்த ஏந்தல் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீமகா காளியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

போளூரை அடுத்த ஏந்தல் கிராமத்தில் ஸ்ரீமகா காளியம்மன் கோயில் ஆடி மாத தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏந்தல் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீமகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி தேரோட்ட விழாவை முன்னிட்டு, பக்தா்கள் கடந்த புதன்கிழமை முதல் காப்புக் கட்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தனா். ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் 108 பால்குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். மாலையில் ஊரணி பொங்கலிட்டு பம்பை, உடுக்கை, மேளதாளத்துடன் ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, வாணவேடிக்கையும், இரவு ஸ்ரீமகா காளியம்மன்னுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தி தோ் மீது அம்மனை எழுந்தருளச் செய்யும் வைபவம் நடைபெற்றது.

Story image

தொடா்ந்து, சனிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னா், பம்பை, சிலம்பு, பேண்டு வாத்தியங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் இழுத்துச் சென்றனா். மேலும், வீடுதோறும் தேரிலிருந்த அம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர தீபாராதனை காட்டியும் கிராம மக்கள் வழிபட்டனா். இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.