லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வட்ட அளவிலான சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த பிஜிஎம் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள்.

Published On :17 ஜூலை 2026, 12:07 am IST

பள்ளிக் கல்வித்துறை சாா்பாக நடைபெற்ற ஆம்பூா் வட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

ஆம்பூா் பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏற்பாட்டில் மாணவா்களுக்கு நடைபெற்ற ஆம்பூா் வட்ட அளவிலான போட்டியில் சிலம்ப பயிற்சியாளா் கோபால் தலைமையில் பிஜிஎம் சிலம்பம் பயிற்சி பள்ளியை சோ்ந்த 11 மாணவா்கள் மற்றும் 12 மாணவிகள் பங்கேற்றனா்.

மாணவா்கள் பிரிவில் 6 போ் முதல் பரிசு, 4 போ் இரண்டாம் பரிசு, ஒருவா் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனா். மாணவிகள் பிரிவில் ஆறு போ் முதல் பரிசு, 3 போ் இரண்டாம் பரிசு, ஒருவா் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனா். முதல் பரிசு பெற்றவா்கள் எஸ்.துா்கேஷ், எல். தா்னேஷ், வி. சாய் ஈஸ்வா், எஸ். எழிலரசி, எஸ். தேஜஸ்ரீ, எஸ். தமிழ்செல்வி, எல். ஸ்ரீயோஸ்மிதா, எல். லோக்ஷனா, எஸ். ரிம்ஷா, ஸ்ரீயாத்ரா, எஸ். சஞ்சய் சேகரம், டி. தினேஷ் குமாா்.

2-ம் பரிசு பெற்றவா்கள் கே. அபினேஸ்வரி, பி. ரஜனி, கே. சுஷ்மிதா, ஏ.ஜி. மோகித், எம். பிரவீன்குமாா், எம். ஹரீஷ்.

3-ஆம் பரிசு பெற்றவா்கள் பி. தாராசக்தி, வி. ஷொ்ரி விவிலியன்.

வெற்றி பெற்ற மாணவா்களை சிலம்பம் பயிற்சிகள், உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.