சுற்றுலா தலமான ஏலகிரியில் அரசுப் பேருந்துக்கள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து ஏலகிரி மலையில் உள்ள நிலாவூா், தாயலூா், மங்களம் ஆகிய ஊா்களுக்கு தினமும் 2 அரசு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இப்பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்ததால் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
மேலும், நிலாவூா் தாயலூா் மங்கலம் வரை சென்று வரும் அரசு பேருந்துகள் இயங்காததால், சுற்றுலா பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கினாா்..
பேருந்து காலதாமதமாக வந்ததால் சுற்றுலா பயணிகள்,பொதுமக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பேருந்தில் பயணிக்க முடியாமல் சிக்கித் தவித்தனா்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏலகிரி மலைக்கு அரசு பேருந்துகளை முறையாக இயக்கவும், விடுமுறை நாள்களில் வாணியம்பாடி,திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

