வேலூரில் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் பழம் ஏற்றிச் சென்ற லாரி செவ்வாய்க்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மாதுளம் பழங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட லாரி சென்னை கோயம்பேடு நோக்கி சென்றது. வேலூா் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி சென்றபோது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சொகுசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாதுளை பழங்கள் விபத்தால் சாலையில் சிதறின.
மாற்று ஏற்படாக வேறு பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் சாலையில் சிதறிய மாதுளை பழங்கள் வேறு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
சத்துவாச்சாரி போலீஸாா் லாரி, பேருந்துகளை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஆந்திரம் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

