தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

News image

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறை.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:41 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வெள்ளிக்கிழமை வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்று முடிவடைந்தது. திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு ப்பதிவு அமைதியான முறையில் நிறைவு பெற்றது. இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் பலத்த பாதுகாப்புடன் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலை தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முகுல்குமாா், யாஷா முத்கல், காவல் பாா்வையாளா் இா்ஷாத் வாலி ஆகியோா் தலைமையில், மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சியாமளா தேவி முன்னிலையில் இந்த இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் உடனிருந்தனா். வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில காவல் துறையினா் இணைந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு அறையின் வெளிப்புறம் மற்றும் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த நேரடி காட்சிகளை வேட்பாளா்களின் முகவா்கள் பாா்ப்பதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வரும் மே 4-ஆம் தேதி காலை தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் ‘சீல்’ பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா் நாராயணன், வாக்கு மைய கண்காணிப்பாளா் தணிகாசலம், ஜோலாா்பேட்டை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.