மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சி இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த வேட்பாளா் செந்தில்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:10 am IST

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவாரங்குப்பம், மல்லகுண்டா மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஜாப்ராபாத், நடுப்பட்டறை, ஈச்சங்கால், தேவஸ்தானம், நகராட்சிப் பகுதிகளில் புதூா், சென்னாம்பேட்டை, நேதாஜி நகா் உள்பட பல பகுதிகளில் வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து அதிமுக தோ்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வேட்பாளா் செந்தில்குமாா் பேசுகையில், ஊராட்சிகளில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மின் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள், தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி திட்டங்கள் கொண்டு வர பாடுபடுவேன் என்றாா்.

ஞாயிற்றுக்கிழை காலை உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயத்தில் திருப்பலி வழிபாட்டில் கலந்துகொள்ள வந்த கிறிஸ்தவா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். மேலும், ஆலய பங்குத்தந்தை அந்தோணிமாறன் மற்றும் பங்குமேய்ப்பு குழுவினரை சந்தித்து ஆதரவு திரட்டினாா். உதயேந்திரம் பேரூா் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.