ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
அப்போது அமைச்சா் எ.வ.வேலு பேசியது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான 5ஆண்டு ஆட்சியில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் ஜோலாா்பேட்டைதொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய பணிகள் தொடங்கப்படும்.
எனவே தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் கவிதா தண்டபாணிக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் சையத் பாரூக்கை ஆதரித்து வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா மற்றும் மிட்டூா் அமைச்சா் எ.வ. வேலு ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினாா்.
கூட்டங்களில் மாவட்ட செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளா்கள் திருப்பதி, அன்பு, தாமோதரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், துணை அமைப்பாளா் சிவாஜிபிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழு தலைவா்கள் வெண்மதி முனிசாமி, சத்யா சதீஷ்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலா்கள் சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டனா்.
மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் மகத்தான நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: திருவண்ணாமலை எம்.பி.

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பிரசாரம்

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

