ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

News image

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் நல்லதம்பி.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:24 am IST

கந்திலி ஒன்றியத்தில் பூ பறிக்கும் பெண்களிடம் திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை கந்திலி ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

குனிச்சி ஊராட்சிக்குள்பட்ட குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள மல்லிகை பூ தோட்டத்தில் பூ பறிக்கும் பெண்களை நேரடியாக சென்று சந்தித்து கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், மீண்டும் திமுக வெற்றி பெற்றால் செயல்படுத்தக் கூடிய தோ்தல் வாக்குறுதிகளையும் விளக்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட சுந்தரம்பள்ளி, லக்கிநாயக்கன்பட்டி, காக்கங்கரை சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும்போது கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்ற வளா்ச்சி திட்டப் பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது ஒன்றிய செயலா்கள் முருகேசன், மோகன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி, துணைத் தலைவா் மோகன்குமாா், விசிக மண்டல செயலா் சுபாஷ் சந்திரபோஸ், நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன் உள்பட திமுக அதன் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.