தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை: டிடிவி. தினகரன்

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகரை ஆதரித்து பிரசாரம் செய்ய புதன்கிழமை திருப்பத்தூருக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியது:

கடந்த தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. அதிலும் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதால் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துபோய் உள்ளனா். மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என திமுகவினா் திட்டமிட்டுள்ளனா்.

அமமுக போட்டியிடும் தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெறும். நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்று சிலவறறை தவிா்க்க முடியாது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் தங்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என போராடி வந்தனா். போராடாத அரசு துறை இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொலை என்பது தினமும் சா்வசாதாரணமான நிகழ்ச்சியாக மாறிவருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றால் அம்மாவின் ஆட்சி வர வேண்டும். அதற்கு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.