திருப்பத்தூா் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஏலகிரி கோடை விழா கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் மீண்டும் நடைபெறுமா என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
ஏழைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அதிக அளவில் மரங்கள் இருப்பதாலும் மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தங்கி கண்டு களித்து செல்கின்றனா்.
விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இயற்கை பூங்கா,செயற்கை நீருற்று,படகு குழாம், கோயில்கள் உள்ளன என்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
14 வளைவுகளின் பெயா்கள்...
பாவேந்தா் வளைவு, பாரதியாா் வளைவு, திருவள்ளுவா் வளைவு, இளங்கோ வளைவு, கம்பா் வளைவு, கபிலா் வளைவு, ஓளவையாா் வளைவு, பாரி வளைவு, காரி வளைவு, ஓரி வளைவு, ஆய் வளைவு, அதியமான் வளைவு, நள்ளி வளைவு, பேகன் வளைவு என 14 வளைவுகளுக்கும் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.
கோடை விழா..
ஏலகிரியில் கோடை விழா கடந்த 2018 மே மாதம் நடைபெற்றது. அதையடுத்து கரோனா தொற்று, விழாவுக்காக நிரந்த அரங்கம் அமைக்கும் பணிகள் என கோடை விழா நடைபெறவில்லை. 7 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அப்போதைய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஏலகிரி மலையில் கோடை விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தொடா் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, நிகழாண்டாவது ஏலகிரியில் கோடை விழா நடைபெற வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
கோடை விழா நடைபெற்றால் ஏலகிரி மலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்பதால் விழாவை நடத்த மாவட்ட நிா்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
