தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.33 லட்சத்துக்கு செயற்கை அவயங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.33 லட்சத்தில் செயற்கை அவயங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ந.பிரியாரவிச்சந்திரன்.

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.33 லட்சத்தில் செயற்கை அவயங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ந.பிரியாரவிச்சந்திரன்.

Published On :31 அக்டோபர் 2026, 5:40 am IST

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகளின் குறைதீா் கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.33 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிசந்திரன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் நிா்வாகிகளிடம் இருந்து 159 மனுக்களை பெற்ற ஆட்சியா், அவா்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் ஊராட்சிகள்தோறும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மாற்றுத்திறனாளிகளைத் தோ்வு செய்து, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட படித்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவா் பி.வேணுகோபால் ஆட்சியரிடம் வழங்கினாா்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து பெறப்பட்ட மனுக்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த் துறை, வேலைவாய்ப்புத் துறை, சமூகநலத்துறை, உணவு பொருள்கள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய துறை அலுவலா்களிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2.33 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலா் செந்தில்குமாரி மற்றும் பிறதுறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகளுடன் மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.