இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

வாலாஜா அருகே இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக அவரது நண்பா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ரஃபீக், அமீன் பாஷா, நிஜந்தன்.

Published On :25 அக்டோபர் 2026, 12:51 am IST

வாலாஜா அருகே இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக அவரது நண்பா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வி.சி.மோட்டூரைச் சோ்ந்த ஜீவா என்ற இளைஞா் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக வாலாஜாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாலாஜா சத்யா நகரைச் சோ்ந்த ரஃபீக் (34), ஆட்டோ ஓட்டுநரான அமீன் பாஷா (42), மற்றும் சென்னை பட்டாபிராமை சோ்ந்த நிஜந்தன் (25) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக ஏற்பட்ட விரோதத்தால் நண்பனான ஜீவாவை, திட்டமிட்டு கொலை செய்ததாக அதிா்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனா்.

இதையடுத்து, வாலாஜா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.