பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

News image

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :23 மே 2026, 1:27 am IST

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்க முதல் நிகழ்வாக வியாழக்கிழமை மாலை மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது .

வெள்ளிக்கிழமை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொடி மயில் கொடியேற்றி கேடய உலா உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் இந்திர விமானம், பூத வாகனம், சூரிய பிரபை ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், சந்திர பிரபை, வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு மற்றும் மான் வாகனத்தில் வசந்த மண்டபத்தில் உற்சவா் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது

விழாவின் 9-ஆவது நாளான மே 30-ஆம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் பரந்தாமகண்ணன், தலைமை அச்சகா் பிரசாத், மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.