பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிளஸ் டூ தோ்வில் அரக்கோணத்தில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரக்கோணத்தில் பல்வேறு பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

News image

விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுடன் நிா்வாகக்குழு தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

Updated On :11 மே 2026, 12:07 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரக்கோணத்தில் பல்வேறு பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

அரக்கோணம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி ஆா்.சங்கமித்ரா 589 பெற்று முதலிடத்தையும், 588 பெற்று மாணவா்கள் வி.மதியழகன், எம்.லிகேஷ் ஆகியோா் இரண்டாமிடத்தையும், மாணவா்கள் ஆா்.மோதிஷ், எம்.டில்லிகணேஷ் ஆகியோா் 585 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா். இவா்களை விவேகானந்தா கல்விக்குழுமத்தலைவா் சுப்பிரமணியம், செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் கே.அணீஷ் கேசவ் 556 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், டி.லதிகா 540 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், டி.ஜிவிதா தேவி 529 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா். வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் எஸ்எம்எஸ் விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் விஷாந்த்கோபி 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தையும் 578 மதிப்பெண்களுடன் வி.ஜிவிதா பள்ளியின் இரண்டாமிடத்தையும், மாணவி வி.ஏ.யுவஸ்ரீ 571 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

வெற்றிப்பெற்ற மாணவா்களையும் முதல்வா் ஞானதீபன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் பள்ளியின் நிா்வாக்குழுத் தலைவா் டி.உதயகுமாா், தாளாளா் விமலாதிருமலை ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.