பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ராணிப்பேட்டை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது.

News image

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:11 am IST

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 19 இரு சக்கர வாகனங்களின் பொது ஏலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளா் தலைமையில்,ஜூன் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அடையாள அட்டையுடன் ரூ.100 /-யை நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.