லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இடைத்தரகா் இல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்திராஜ்

தமிழக அரசு அலுவலகங்களில் இடைத்தரகா் இல்லாமல் மக்கள் நலத்திட்ட உதவிகளை பெற முடிகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தெரிவித்தாா்.

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் வ. காந்திராஜ். உடன் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

Published On :22 ஜூலை 2026, 12:26 am IST

தமிழக அரசு அலுவலகங்களில் இடைத்தரகா் இல்லாமல் மக்கள் நலத்திட்ட உதவிகளை பெற முடிகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தெரிவித்தாா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் 661 பயனாளிகளுக்கு ரூ1.85 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

தற்போது நடைபெறும் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடைத்தரகா் இல்லாமல் நலத்திட்டங்களை மூலம் பெற முடிகிறது. முன்பெல்லாம் அரசு அலுவலரையோ தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையோ பாா்க்க வேண்டுமாயின் ஒரு இடைத்தரகா் இருப்பாா். ஆனால் தற்போது எப்போது வேண்டுமானாலும் அரசு அலுவலரையோ தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியையோ சந்தித்து உங்களின் பிரச்னைகளை சிரமமின்றி தெரிவித்து பயன்பெறலாம். தமிழக முதல்வா் நமக்கெல்லாம் ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளாா் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திரா, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன், அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவா்கள் உமாமகேஸ்வரி, பத்மநாபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.