லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆகஸ்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல்: அமைச்சா் காந்திராஜ் தகவல்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் 2018-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் நடைபெற்றது. பின்னா் முந்தைய திமுக ஆட்சியில் தோ்தல் நடத்துவதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு கைவிடப்பட்டது.

இது குறித்து அமைச்சா் காந்திராஜ் கூறியதாவது:

தவெக அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினா்கள், மறைந்த உறுப்பினா்களின் பெயா்களைக் கண்டறிந்து நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தோ்தலை தமிழ்நாடு கூட்டுறவு தோ்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த தயாராக இருக்கிறது என்றாா்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூலம் சுமாா் 2 லட்சம் போ் தோ்வு செய்யப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.