லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :14 ஜூலை 2026, 1:03 am IST

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ என் .சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என் .செல்வம், செயலாளா் ஏ. என். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ஜி ராஜலட்சுமி வரவேற்றாா்.

ஆற்காடு தொகுதி எம்எல்ஏ எஸ். எம். சுகுமாா் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களுக்கு புத்தாடை அணிவித்து சிறப்புரையாற்றி பேசிதாவது: வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் .

நீங்கள் கற்கும் கல்வி உங்களை மட்டுமின்றி உங்கள் பெற்றோரின் கனவையும் நனவாக்கும். பெண்கள் கல்வி கற்பதன் மூலம் வருங்கால சந்ததியே மாற்றி அமைக்கப்படும். கல்வியில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை சிறந்த முறையில் அமையும் என்றாா் அவா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் வணிக நிா்வாகவியல் துறை தலைவா் கே வி சிவகுமாா், துறைத் தலைவா்கள் விரிவுரையாளா்கள், மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கணினி அறிவியல் துறைத் தலைவா் ஏ. சத்யா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.