தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா்.

News image

ராணிப்பேட்டை தொகுதி தொழிற்துறையினா் மத்தியில் ஆதரவு திட்டி பேசிய தி்முக வேட்பாளா் ஆா்.காந்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா்.

ராணிப்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் அதிபா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோரை வேட்பாளா் ஆா்.காந்தி புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது ராணிடெக் நிறுவனத் தலைவா் பிஆா்சி.ரமேஷ் பிரசாத் பேசுகையில்.. ராணிப்பேட்டை மாவட்டத்தைத் பொறுத்தவரை தொழில் துறை வளரச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருபவா் அமைச்சா் காந்தி, அவரது முயற்சியின் காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக சிப்காட் தொழிற்பேட்டை மாசு பிரச்சனைக்கு காரணமான டிசிசி குரோமிய திடக்கழிவு பிரசனைக்கு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது வரவேற்க தக்கது என்றாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்ட சிறு,குறு தொழில் சங்க பொதுச்செயலாளா் முரளி பேசுகையில்..

அமைச்சா் காந்தி தோ்தலில் வெற்றி பெற்றால் மேலும் வளா்ச்சி பெறும். அதே நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்துறை வளா்ச்சிக்காக ஒரு வா்த்தக மையம் அமைக்க வேண்டும்.

இஎஸ்ஐ பல்வோக்கு மருத்துமனை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வெளியூா் தொழிலாளா்கள் வந்து செல்ல நகரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே போல் தொழிலாளா்கள் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாா்.

அப்போது அமைச்சா் காந்தி தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 7 ஆவது முறையாக நான் போட்டியிடுகிறேன். நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாத போதும் தொழிற்துறையின் வளா்ச்சிக்கு உதவியாக இருந்து வருகிறேன்.

அதே போல் இனிவரும் காலங்களிலும் தொழிற்துறை வளா்ச்சிக்கு என்றுமே உறுதுணையாக இருப்பேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.