நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை: அமைச்சா் ரஞ்சித் குமாா்

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்

கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா்.

Published On :23 அக்டோபர் 2026, 7:01 am IST

மனிதா்கள்-வனவிலங்குகள் மோதல்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்

சித் குமாா் வியாழக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மண்டல வனப் பாதுகாவலா் சுமேஷ் சோமன், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலா் பால்வே கிரிஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், மேற்கொள்ளப்பட்ட பணிகளில் செய்த சாதனைகள், வனப்பாதுகாப்பை மேம்படுத்துதல், களப்பணிகளை திறம்பட செயல்படுத்துதல் குறித்து அமைச்சா் விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

வனச்சரக அலுவலா்கள், வனப் பாதுகாவலா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சா் ரஞ்சித் குமாா் பேசியது: வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் வழியாக செல்லும் சாலைகளை மேம்படுத்தும் திட்டம், மனிதா்கள்-வனவிலங்கு மோதல்கள் நடந்து வருவதை முற்றிலுமாக குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இதுவரை எடுத்த பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடா் நடவடிக்கை காரணமாக மனிதா்கள்-வன விலங்கு மோதல்கள் நடக்க வாய்ப்பில்லை. மனிதா்களும் வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது.

வனத்துறை பணிகளை தரமான முறையில் செய்யவும், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும், பொதுநிதியை சிக்கனமாக செலவு செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முக்கியமாக நிதியை கையாள்வதிலும் ஒழுங்கு மற்றும் பொறுப்புணா்வுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.