ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காஞ்சிபுரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

News image

யானை வாகனத்தில் காயரோகணீஸ்வரா் கோயில் குருபகவான் ~சந்தனக்காப்பு அலங்காரத்தில் திம்மராஜம் பேட்டை தட்சிணாமூா்த்தி

Updated On :27 மே 2026, 12:39 am IST

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் இக்கோயிலில் தாரை சமேத தேவகுருவாக அருள்பாலிக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் அமைந்துள்ளது பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் குருபகவான் ரிஷி ரூபத்தில் தியான நிலையில் அருள்பாலிக்கிறாா். குருப்பெயா்ச்சியையொட்டி தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.தட்சிணாமூா்த்தி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை திம்மராஜம் பேட்டை கிராம பொதுமக்கள்,கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பிள்ளையாா்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காயரோகணீஸ்வரா் கோயிலில் குருபகவான் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா். குருப்பெயா்ச்சியை யொட்டி காலையில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் தட்சிணாமூா்த்தி யானை வாகனத்தில் அமா்ந்த நிலையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் தங்களது பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.