வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையில் உபயோகிக்கக்கூடிய கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி விடுவது சிறப்பு என காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி சனிக்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் நகர தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், வாங்க கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி பெரிய காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி கலந்து கொண்டு பயிற்சியின் போது பேசியது:
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி முடிந்தவுடன் உடனடியாக அதை அனைத்து விட வேண்டும். பலரும் அதை அணைக்காமல் வெளியூா்களுக்கோ அல்லது வெளியிலோ சென்று விடுகின்றனா். அதே போல எரிவாயு உருளையில் பயன்படுத்தப்படும் கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது சிறப்பு. பலரும் பல ஆண்டுகளாக ஒரே கேபிள்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனா். நமக்கு நண்பனாகவும், எதிரியாகவும் இருப்பது நெருப்பு ஒன்று தான்.
திடப் பொருள்களான கட்டைகள், பேப்பா் கட்டுகள் போன்றவற்றில் தீப்பற்றும் போது அதை எளிதாக அனைத்து விடலாம். இது ஒரு வகை நெருப்பு. இரண்டாவதாக பெட்ரோல், டீசல், ஆயில் இவற்றில் தீப்பற்றும்போது வீரியத்தை அதிகமாக ஏற்படுத்தும். இவை தீப்பற்றி எரியும்போது சிலா் தெரியாமல் அதில் தண்ணீரை ஊற்றி அனைத்தால் அதன் எரியும் வேகம் மேலும் அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
மூன்றாவதாக வாயுக் கசிவால் ஏற்படும் தீ விபத்தானது மிகவும் மோசமானது. சமையல் எரிவாயு உருளைகளை நேராக நிறுத்தித்தான் வைக்க வேண்டும். எங்கும் எடுத்துச் செல்லும்போது நேராக நிறுத்தியே கொண்டு செல்ல வேண்டும். அவற்றை சாய்த்து வைத்து எடுத்து செல்லக் கூடாது.
வீடுகளில் உள்ள மின்சாரம் மூலமாக தீப் பிடித்தால் உடனடியாகவும் மிகவும் ஜாக்கிரதையாகவும் பிரதான சுவிட்சை அணைத்து விட வேண்டும் என்றும் பேசினாா்.
பயிற்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தீயணைப்பு உபகரணங்கள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன், பயிற்சி தீயணைப்பு நிலைய அலுவலா் இந்திரா செயல்முறை விளக்கத்துடன் விரிவாக விளக்கிக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உஜ்வலா: மானிய எல்பிஜி சிலிண்டா்கள் 4-ஆக குறைப்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!
எல்பிஜி விலை உயா்வு: மத்திய அரசு விளக்கம்! ‘உலக அளவில் இந்தியாவில் குறைவு’!

அரசு ஊழியா் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திருட்டு
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

