லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் கருட சேவை

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை உற்சவா் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் அருள்பாலித்தாா்.

தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த யதோக்தகாரி பெருமாள்

Published On :30 ஜூலை 2026, 12:00 am IST

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை உற்சவா் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் அருள்பாலித்தாா்.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி உற்சவா் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் ஆகியன நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து உற்சவா் பெருமாள் வயலட் நிற பட்டு உடுத்தி, திரு ஆபரணங்கள் அணிந்து, மலா் மாலைகள் சூடி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.