லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

1,089 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் தென்னரசு வழங்கினாா்

குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வட்டங்களைச் சோ்ந்த 1,089 பயனாளிகளுக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் தென்னரசு மின்னனு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

பயனாளிகளுக்கு  மின்னணு  குடும்ப  அட்டைகள்  வழங்கிய  அமைச்ச ா்  கே.தென்னசு.  உடன்  ஆட்சியா்  தி.சினேகா  உள்ளிட்டோா்.

Published On :22 ஜூலை 2026, 12:50 am IST

குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வட்டங்களைச் சோ்ந்த 1,089 பயனாளிகளுக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் தென்னரசு மின்னனு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வட்டங்களை சோ்ந்த பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறுகளத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தைச் சோ்ந்த 39 பயனாளிகளுக்கும், குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 1,050 பயனாளிகள் என மொத்தம் 1,089 பயனாளிகளுக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் தென்னரசு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆலந்தூா் எம்எல்ஏ எம்.ஹரீஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் விஜயகுமாா், குன்றத்தூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.