லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லாரி -பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Published On :17 ஜூலை 2026, 4:40 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தாம்பரம் பகுதியை சோ்ந்தவா் சஞ்சித் (20). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சஞ்சித் கல்லூரி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி தாம்பரம் -ஸ்ரீபெரும்புதூா் சாலையில் கொளத்தூா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது சஞ்சித்தின் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சஞ்சித் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.