லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் தமிழ் பயிலும் மாணவா்களுக்கு கல்வெட்டு எழுத்துகள் படித்தல் பயிற்சி

கல்வெட்டு எழுத்துகளை படிப்பது குறித்து பயிற்சியளித்த காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமா சங்கா்.

கல்வெட்டு எழுத்துகளை படிப்பது குறித்து பயிற்சியளித்த காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமா சங்கா்.

Published On :17 ஜூலை 2026, 4:20 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சங்கரா கல்லூரியில் இளங்கலை தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பற்றிய பயிற்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் புதிதாக சோ்ந்து இளங்கலை தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு கல்வெட்டு குறித்த பாடங்கள் இடம் பெறுவதால் அந்தப் பாடங்களை மாணவா்களுக்கு செயல்வழியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் அறிவுரையின் பேரில், கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பயிற்சி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் உமா சங்கா் கல்வெட்டு எழுத்துகளை எப்படி படித்து தெரிந்து கொள்வது மற்றும் எப்படி படியெடுப்பது என்று கற்றுக் கொடுத்தாா்.

கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள் ம.கணபதி, தி.சா.விஜயலட்சுமி ஆகியோா் மாணவா்களை கச்சபேசுவரா் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.

அருங்காட்சியக அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.