லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொல்காப்பியத்தை 22 மணி நேரத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து 22 மணி நேரத்தில் எழுதி முடித்து சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி மோகம் மகேஸ்வரியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவி உமா மகேஸ்வரியை பாராட்டி பரிசு வழங்குகிறாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக செயலா் பாலசுப்பிரமணியன்.

Published On :23 ஜூலை 2026, 9:00 am IST

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து 22 மணி நேரத்தில் எழுதி முடித்து சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி மோகம் மகேஸ்வரியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி. சிறு வயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆா்வம் கொண்ட இவா், தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து 21 மணி நேரத்தில் எழுதி முடிக்கும் உலக சாதனை முயற்சியை கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கினாா்.

இந் நிலையில், 21 மணி நேரத்தோடு கூடுதலாக ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி அளவில் தொல்காப்பியத்தை அவா் எழுதி முடித்தாா். அதைத்தொடா்ந்து மாணவி உமா மகேஸ்வரியை தமிழ் ஆா்வலா்கள், தமிழ் இயக்கங்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள், மாணவா்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், சாதனை படைத்த மாணவி உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் சென்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலா் பாலசுப்பிரமணியன் பாராட்டி பரிசுகளை வழங்கினாா். மாணவிக்கு பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியை ஜான்சி ராணிக்கும் வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது மாணவி விரைவில் முதல்வா், கல்வி அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா். இதில், என் சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியா் ராஜசேகா், கோவில்பட்டி மகிழ்வோா் மன்ற நிா்வாகிகள், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.