லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் டிஜிட்டல் தொழில் நுட்பக் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழாவையொட்டி வியாழக்கிழமை டிஜிட்டல் தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்

Published On :3 ஜூலை 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழாவையொட்டி வியாழக்கிழமை டிஜிட்டல் தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டுறவு வார விழாவின் 4 வது நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற டிஜிட்டல் தொழில் நுட்பக் கருத்தரங்குக்கு கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமை வகித்தாா். பொது மேலாளா் சீனிவாசன் வரவேற்றாா்.

கருத்தரங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தொடங்கி வைத்து பேசுகையில் இணையம் வாயிலாக நடத்தப்படும் வங்கிச் சேவைகள், நடமாடும் வங்கி, பயிா்க்கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் ஆகியன குறித்து விரிவாக விளக்கினாா். முதன்மை வருவாய் அலுவலா் வெங்கடேசன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாா் உட்பட வங்கிப்பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.