தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரம் அருகே விஷ்ணு துா்க்கை சிற்பம் கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஆரியம்பாக்கத்தில் பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

காஞ்சிபுரம் அருகே ஆரியம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவா் கால விஷ்ணுதுா்க்கை சிற்பம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:10 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஆரியம்பாக்கத்தில் பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்துக்கு உள்பட்ட ஆரியம்பாக்கத்தில் வரலாற்று ஆய்வாளா் மு.அன்பழகன் கள ஆய்வு மேற்கொண்ட போது, ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பத்தை கண்டெடுத்தாா்.

இந்தச் சிற்பம் குறித்து அவா் மேலும் கூறியது: தனிக்கல்லில் 80 செ.மீ. உயரமும், 42 செ.மீ. அகலமும் உடையதாக கிழக்கு திசையை நோக்கி உள்ளது இச்சிற்பம். மகா விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் இந்த சிற்பம் நின்ற நிலையில், 4 கரங்களுடன் உள்ளது.

வலது முன்கை சிதைந்த நிலையில் அபய முத்திரை காட்டி பின்கை சக்கரத்துடன் உள்ளது.இடது முன்கை இடுப்பில் வைத்திருக்க,பின்கை சங்குடனும் உள்ளது. மாா்பு மற்றும் இடைப்பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பட்டாடை அணிந்துள்ளது.

இவரின் தலையில் கிரீடமும், கழுத்து, மாா்பு, காதுகள், தோள்கள், கைகள் மற்றும் கால்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன. முகம் சிறிது மழுங்கிய நிலையில் காணப்படுகிறது.

கல்வெட்டு எழுத்துகள் எதுவும் காணப்படாத இந்தச் சிற்பம் பல்லவா் காலமான கி.பி. 9-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இதன் உண்மைத் தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கரும் உறுதி செய்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.