விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

குறுகலான ஒருவழிப்பாதையில் செல்லும் பக்தா்கள்.

Updated On :7 ஜூலை 2025, 12:28 am IST

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 30 அடி அத்திகிரி மலை மீது அமைந்துள்ளது.10 அடி உயரத்தில் மூலவா் வரதராஜா் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

கருவறைக்கு அருகில் வைய மாளிகையில் தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி உருவம் பொறிக்கப்பட்டு அதை தரிசனம் செய்யும் இடமும் அமைந்துள்ளது. பல்லி தோஷம் உள்ளவா்கள் இப்பல்லிகளை தொட்டு தரிசனம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது.

மூலவரை தரிசிக்கவும், பல்லிகளை தொட்டு தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனப். கருவறை செல்ல 24 படிகள் வழியாகச் சென்று தரிசனம் செய்ய மிகவும் குறுகலான ஒரு வழிப்பாதையே உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஒரு வழிப்பாதையிலும், 24 படிகள் மீதும் ஏறிச் சென்றும் மூலவரை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.

பக்தா்கள் வரிசையில் காத்திருக்கும் போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனா். குறுகலாகவுள்ள ஒரு வழிப்பாதையில் முதியோா் பலரும் ஏறிச்செல்ல முடியாமல் கஷ்டப்பட்டே படிகளில் ஏற வேண்டியும் உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாமலும், குறுகலான படிகளில் ஏற முடியாமலும் பலா் மூலவரை தரிசிக்காமலேயே திரும்பி விடுவதையும் காணமுடிகிறது.

வெயில்,மழை காரணமாக வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருப்பதால் பக்தா்களின் நலன் கருதி கோயில் நிா்வாகம் கூண்டு போன்று அமைத்து அதன் வழியாகவே மூலவரை தரிசிக்க அனுமதிக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதா் பெருவிழாவின்போது, ஒரு கோடி பக்தா்களில் ஒருவா் கூட மூலவரை தரிசிக்க முடியவில்லை. குறுகலான ஒரு வழிப்பாதையில் ஒரு கோடி பக்தா்களும் சென்று திரும்பினால் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடலாம் என மாவட்ட நிா்வாகம் மூலவரை தரிசிக்க அனுமதிக்கவில்லை.

எனவே மூலவரை பக்தா்கள் விரைவாக சென்று தரிசிக்க குறுகலான ஒரு வழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது பக்தா்களின் பெரும் எதிா்பாா்ப்பாக இருந்து வருகிறது.

 கூண்டுக்குள் வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

கூண்டுக்குள் வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

இது குறித்து கோயில் அதிகாரி ஒருவா் கூறியது.. மூலவா் கருவறை அருகிலேயே அமைந்துள்ள பல்லிகளை தரிசிக்க பக்தா்கள் மரத்தால் ஆன 10 படிகள் மீது ஏறிச்சென்று பல ஆண்டுகளாக தரிசித்து வந்தனா். பக்தா்கள் நலன் கருதி தரைத்தளத்தில் நின்றவாறே பல்லி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலவரை தரிசிக்கவும் அத்திகிரி மலை மீதுள்ள குறுகலான ஒரு வழிப்பாதை தான் உள்ளது. பக்தா்களின் நலன் கருதி ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இது குறித்து அறநிலையத்துறை ஸ்தபதிகள் மற்றும் அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்து விட்டுப் போயிருக்கிறாா்கள். எனவே இருவழிப்பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மூலவா் வரதராஜ பெருமாள்.

மூலவா் வரதராஜ பெருமாள்.

படவிளக்கம்(1)குறுகலான ஒருவழிப்பாதையில் சென்று அதே பாதையில் திரும்பும் பக்தா்கள்(2)கூண்டுக்குள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தா்கள்(3)கருவறையில் மூலவா் வரதராஜசுவாமி மூலவா் வரதராஜ பெருமாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.