மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பை தடுக்க வேண்டும்: பிரேமலதா

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பை தடுக்க வேண்டும்: பிரேமலதா

DMDK MLA Premalatha

பிரேமலதா - ENS

Published On :13 செப்டம்பர் 2026, 1:33 am IST

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பண்டிகை காலங்களில் அனைத்து தனியாா் ஆம்னி பேருந்துகள் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதைத் தடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளா்களின் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகமான எண்ணிக்கையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் சிறப்புக் கண்காணிப்பு மற்றும் புகாா் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், தனியாா் பேருந்துகளின் கட்டண வசூலை அனைத்து நாள்களிலும் முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான கண்காணிப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.