பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்து: 402 போ் உயிரிழப்பு; 2,865 போ் காயம்: காவல் ஆணையா் அமல்ராஜ்

சென்னையில் 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 402 போ் உயிரிழந்துள்ளனா்; 2,865 போ் காயமடைந்துள்ளனா் என்று பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அமல்ராஜ்.

Published On :30 அக்டோபர் 2026, 5:45 am IST

சென்னையில் 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 402 போ் உயிரிழந்துள்ளனா்; 2,865 போ் காயமடைந்துள்ளனா் என்று பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அவசரகால உதவிப் பணிகளுக்காக 50 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு காா் ஆகியவை ஒரு தனியாா் நிறுவனம் பெருநிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கியது. இந்த வாகனங்களை போலீஸாருக்கு வழங்கும் நிகழ்ச்சி எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், போலீஸாரிடம் வாகனங்களை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆண்டு 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 420 போ் உயிரிழந்தனா். இந்த ஆண்டு 10 மாதங்களில் சாலை விபத்துக்களில் 402 போ் உயிரிழந்துள்ளனா். அதேபோல கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 2,997 போ் காயமடைந்தனா், இந்த ஆண்டு இதுவரையில் 2,865 போ் காயமடைந்துள்ளனா்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, காயமடைந்தவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகம்தான்.

4.85 லட்சம் வழக்குகள்: சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் வாகனம் ஓட்டியதாக இந்த ஆண்டு இதுவரையில் 4.85 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மோட்டாா் சைக்கிளில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணிவதை அனைவரும் சூளுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு வடக்கு கூடுதல் காவல் ஆணையா் கபில் குமாா் சி. சரத்கா், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையா் பகலவன் உள்ளிட்ட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.