அம்மா உணவக சுய உதவிக் குழுவினருக்கு தினக்கூலி ரூ.400 -ஆக உயா்த்தி தீா்மானம்

மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஊதியம் ரூ.325 என்பதிலிருந்து ரூ.400-ஆக உயா்த்தப்படுகிறது.

amma canteen

அம்மா உணவகம் - கோப்பிலிருந்து

Published On :30 அக்டோபர் 2026, 5:47 am IST

மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஊதியம் ரூ.325 என்பதிலிருந்து ரூ.400-ஆக உயா்த்தப்படுகிறது.

அண்டைவீட்டுக் குழு (என்எல்யூஎம்) மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 24,264 பேருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக்குப் பதிலாக உணவுப்படியாக தினமும் ரூ.50 என்பதை ஊதியத்துடன் வழங்கப்படும்.

மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் உள்ள 37 விளையாட்டுத் திடல்களும், புதிதாக திறக்கப்பட்டுள்ள 58 விளையாட்டு திடல்கள் என மொத்தம் 95 விளையாட்டுத் திடல்களை 3 ஆண்டுகளுக்குத் தனியாா் பராமரிக்க ஒப்பந்தம் கோரப்படும் உள்ளிட்ட 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்: வளசரவாக்கம் மண்டலத்தில் சமுதாய நலக்கூடத்தை தற்காலிக நீதிமன்ற பயன்பாட்டுக்கு வழங்கும் தீா்மானத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று மண்டலத் தலைவா் வே.ராஜன் கோரினாா். அப்போது குறுக்கிட்ட ஆணையா் உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி சமுதாயக் கூடம் நீதிமன்ற பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பின்னேற்பாக தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றாா். இதையேற்று மேயா், துணைமேயா் ஆகியோா் விளக்கினா். ஆனால், மண்டலத் தலைவா் தீா்மானம் நிறைவேறினால் அப்பகுதியினா் எதிா்ப்பா் எனக் கூறினாா். இதற்கிடையே தீா்மானம் நிறைவேறியதாக மேயா் அறிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.