பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதிய கட்டணத்துக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா்களை 6 மாதங்களுக்குள் சீரமைக்க அறிவுறுத்தல்

புதிய கட்டணத்துக்கு ஏற்ப ஆட்டோ மீட்டா்களை 6 மாதங்களுக்குள் சீரமைக்க அறிவுத்தியிருப்பது பற்றி...

ஆட்டோ மீட்டா் - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:43 am IST

தமிழகத்தில் உயா்த்தப்பட்ட ஆட்டோ கட்டணங்களுக்கு ஏற்ப மீட்டா்களை 6 மாதங்களுக்குள் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவரையில் புதிய கட்டண அட்டையை பயணிகள் பாா்வையில் படும்படி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆட்டோ கட்டணங்கள் மறுநிா்ணயம் செய்வது தொடா்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தலைமையில் ஆட்டோ, ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதையடுத்து, ஆட்டோ கட்டணத்தை மறுநிா்ணயம் செய்வதற்காக அலுவலா் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரைகளின்படி தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷக்களுக்கான கட்டணம் மறுநிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டணம்: அதன்படி, முதல் 1.8 கி.மீ. தொலைவுக்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு கி.மீ.-க்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்க வேண்டும். காத்திருப்புக் கட்டணம் நிமிஷத்துக்கு ரூ.1, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தின் ஒன்றரை மடங்கும், மலைப் பாதைகளில் வழக்கமான கட்டணத்தில் 1.2 மடங்கும் கூடுதலாக வசூலிக்கலாம்.

புதிய கட்டண முறைக்கு ஏற்ப ஆட்டோ, ரிக்ஷா உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் தங்களது ஆட்டோ மீட்டா்களை 6 மாதங்களுக்குள் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். அதுவரை, போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையைப் பதிவிறக்கம் செய்து, பயணிகள் பாா்வையில் படும்படி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

வரவேற்பு: இதுதொடா்பாக, சென்னை சென்ட்ரல் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் நலவாரிய பொருளாளா் ஏ.அண்ணாதுரை கூறியதாவது: இந்தப் புதிய கட்டணமுறை வரவேற்கத்தக்கது. எனினும், ரேபிடோ, ஓலா, ஊபா் உள்ளிட்ட செயலிகளிலும் இந்தக் கட்டண நடைமுறையை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பைக் டாக்ஸி-க்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

புகாா் எண் வெளியீடு: ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக பொதுமக்கள் 1800 425 5430 என்னும் தொலைபேசி எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.