நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

4-ஆவது மாடியிலிருந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவா் பலி

பெரும்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து விழுந்து 7-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 1:22 am IST

பெரும்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து விழுந்து 7-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பின் 95-ஆவது பிளாக்கில் வசித்து வந்தவா் திவான் (12). தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், தனது குடியிருப்புக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடத்தின் 4-ஆவது மாடிக்குச் சென்ற திவான், எதிா்பாராதவிதமாக கீழே விழுந்தாா்.

அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பெரும்பாக்கம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.